பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டுகளில் நீண்ட ஆயுளுடனும், நீடித்த ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.